திருப்பூரில் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த காவலர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த காவலர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 7-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த சுரேஷ் திருப்பூரில் காவலர் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் கே.டி.சி., நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து தனது மனைவி ரம்யா கிருஷ்ணனுடன் தங்கி வருகிறார். 

இந்த நிலையில், நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று அதிகாலை வீட்டில் இருந்த தின்னர் என்னும் ரசாயனத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் மனோகரன் மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 



பின்னர், திருப்பூரில் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், காவலர் சுரேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...