நீலகிரி : பந்தலூர் அருகே மேங்கோ ரேஞ்ச் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீளமுடைய மலைப் பாம்பை வனத்துறையினர் இலாவகமாக பிடித்தனர்.

பந்தலூர் பகுதியில் உள்ள மேங்கோ ரேஞ்ஜ் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சுற்றி திரிந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று இந்த மலைப்பாம்பு எஸ்டேட்டின் மையப்பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட எஸ்டேட் ஊழியர்கள், தேவாலா வனச்சரகர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 12 அடி மலைப் பாம்பை பிடித்து அருகில் இருந்த அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதன் காரணமாக எஸ்டேட் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.