கருணாநிதி, கனிமொழி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : எச். ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டது தொடர்பாக பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டது தொடர்பாக பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் எம்.பி., கனிமொழியை மறைமுகமாக தாக்கும் வகையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு தி.மு.க., மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதாவது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தொட்டதால் ஆளுநர் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் ‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியனுக்கு ஆதரவாக எம்.பி. கனிமொழி பதிவு வெளியிட்டார். இதற்கு, எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம், ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா..? மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே,' என பதிவிட்டார்.

அவரின் இந்தப் பதிவு தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. இதனால், தி.மு.க.,வினர் தமிழ்நாடு முழுவதும் எச். ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பல்வேறு இடங்களில் புகார் அளித்தனர். 

இந்த நிலையில், தி.மு.க.,வின் கணியூர் முன்னாள் பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமி என்பவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் எச். ராஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் 500 மற்றும் 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...