திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி : திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தேவஸ்தானம் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

திருப்பதி : திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தேவஸ்தானம் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவடைந்தது. இந்த விழாவில் 5, 90,584 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விரதம் இருந்து பாத யாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதை வழியாக வந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரமானது. ரூ. 300 கட்டண தரிசனத்தில் 8 மணி நேரமும் நடைபாதை மற்றும் டைம் ஸ்லாட் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 27 குடோன்களும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தேவஸ்தானம் புரட்டாசி மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

அதன்படி, இன்று வி.ஐ.பி., பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், வரும் 23, 29, 30 மற்றும் அக்டோபர் 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...