கோவை : பிறந்து 30 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவனை சாதனை படைத்துள்ளது.

மூன்று கிலோ எடையுள்ள குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மிகவும் அரிதான, சிக்கலான இருதய நோய், நுரையீரல் இணைப்போடு தொடர்புடையதாக இருந்தது. மருத்துவமனையின் கருத்துப்படி, ‘ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், இடது பக்கத்திற்கு செல்வதற்கு பதிலாக, மாறாக சென்று கொண்டிருந்தது. எனவே, குழந்தையைக் காப்பாற்ற திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
மேலும், இருதய நுரையீரல் தொடர்புகள் ஒரே சமயத்தில் செயலிழக்கத் தொடங்கியதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின், குழந்தைக்கு இன்னும் பல சிரமங்கள் ஏற்பட்டன. இந்த சிக்கல் மிகவும் திறம்பட மேலாண்மை செய்யப்பட்டு, குழந்தை படிப்படியாக குணமடைய தொடங்கியது. குழந்தை சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியதுடன், வழக்கமான சாதாரண குழந்தைகளுக்கான இருதயத்தை போன்றே செயல்பட துவங்கியது.
இந்த அறுவை சிகிச்சை குழுவில், குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் விஜய் சதாசிவம், மருத்துவர்கள் தியாகராஜமூர்த்தி, சுஜித், இருதய சிகிச்சை நிபுணர்கள் தேவபிரசாந்த், நரேந்திர மேனன் ஆகியோரும் குழந்தைக்கான சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சைக்குப்பின் சிசு சிறப்பு நிபுணர்கள் மருத்துவர்கள் சுஜா மற்றும் சித்தார்த் ஆகியோர் சிறப்பாக கவனித்தனர்.