கோவை: கோவையில் டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்அப் சேலஞ்ச் (Defence India Startup Challenge)-ன் அவுட்டுரீச் நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி நடக்கிறது.
கோவை: கோவையில் டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்அப் சேலஞ்ச் (Defence India Startup Challenge)-ன் அவுட்டுரீச் நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி நடக்கிறது.
இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அதை பயன்பாட்டிற்கு தேவையான வகையில் வடிவமைப்பதற்கு அவசியமான உதவிகளை செய்ய அத்துறையால்iDEX துவங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை வெற்றிகரமாக முன் எடுத்துச்செல்ல, இந்திய அளவில் போர்ஜ் உட்பட 5 நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி பெங்களூரில் "டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்அப் சேலஞ்ச்"ஐ அறிமுகப்படுத்தினார்.
போர்ஜ் நிறுவனம், கோவையில், இந்திய பாதுகாப்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்அப் சேலஞ்ச் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 26 செப் அன்று அவுட்ரீச் நிகழிச்சியை கோவை சரவணம்பட்டியில் உள்ள போர்ஸ் நிறுவனத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர், தொழில்நுட்ப நிபுணர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்க போர்ஜ் அழைப்பு விடுக்கிறது.