கேரளா: கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் பிஷப் பிரான்கோ முல்லக்கலை போலீசார் இன்று கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காடு பகுதியில் சிரியோ மலபார் கத்தோலிக்க தேவலாயத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பணிபுரிந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் பாலியல் பலாத்காரப் புகார் கூறினார். பிஷப் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இதனை மறுத்த பிஷப், இந்த விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும், கன்னியாஸ்திரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதால் தன் மீது அவர் புகார் கூறியதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதனிடையே, முல்லக்கல் மீதான புகார் தொடர்பாக வாடிகன் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிஷப் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்தியாவிற்கான தேவாலய பிரதிநிதிகள் வாடிகனில் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, பாலியல் புகார் தொடர்பாக கொச்சி அருகே திருபுனித்துரா என்ற இடத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் போலீஸ் அலுவலகத்தில் பிஷப்பிடம் 3 நாள் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.