கோவை: கோவை உள்ள எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கல்வி நிறுவன அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் (மல்லிகா) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் சுமார் 2 ஆண்டுகளாக அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கல்லூரியின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் துடியலூர் காவல் நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) புகார் அளித்துள்ளார். ஆனால், அவரே அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
கல்லூரி நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியே சில்மிஷ செயல்களில் ஈடுபட்டது, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.