கோவை: முதலமைச்சர் குறித்து பேசிய எம்.எல்.ஏ., கருணாஸை, புறம்போக்கு என கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வசைபாடினார்.

கோ- ஆப்டெக்ஸ் மருதம் விழா கால சிறப்பு விற்பனை மற்றும் விரிவாக்கப்பட்ட நிலையத்தை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கனகராஜ், ஆறுக்குட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ., கருணாஸ் விமர்சித்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இரட்டை இலை சின்னத்தின் மூலம் வெற்றி பெற்றவர் கருணாஸ், அவர் ஒரு புறம்போக்கு என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.