கோவை : அவினாசி சாலையில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இரண்டு குதிரைகளை பிடிக்க குதிரை சவாரி கிளப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோவை - அவினாசி சாலையில் இரண்டு குதிரைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த வழியாக வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அவ்வப்போது தாக்கி வந்த இந்தக் குதிரைகளின் உடலில் பல இடங்களில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், அலெக்ஸாண்டர் குதிரை சவாரி கிளப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கயிறுகளுடன் வந்து குதிரைகளை பிடிக்க முயன்றனர்.
ஆனால், அவர்களுக்கு கடும் சவாலாக இருந்த இந்தக் குதிரைகள் சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடின. சாலைகளில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தலைதெறிக்க ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வாகன ஓட்டிகளும் குதிரைகளை பிடிக்க உதவி செய்தனர்.
ஆனால், எந்த பயனும் அளிக்கவில்லை. இருப்பினும், குதிரைகளைப் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவேளை குதிரைகள் பிடிக்கப்பட்டால், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குதிரைகளின் முன்னாள் உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால், சாலைகளில் இதுபோன்ற கால்நடைகள் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.