கோவை : பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் எஸ்.என்.எஸ்., கல்லூரியின் நிர்வாகியை கைது செய்யக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சரவணம்பட்டியிலுள்ள எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சுப்பிரமணியம் (64), அங்கு பணிபுரியும் பெண்களுக்கு கடந்த சில வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட பல பெண்கள் வேலையில் இருந்து நின்றுள்ளதாகவும், அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே, அக்கல்லூரியின் இயக்குனர் சுப்பிரமணியம் பெண் பணியாளரை, பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் உயிருக்கு பயந்து புகார் கொடுக்க முன்வராத நிலையில், சுப்பிரமணியத்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் துடியலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா..? என்பது குறித்து விசாரிக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.