பொது இடத்தில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ. 20.000 அபராதம் : கீரணத்தம் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : கீரணத்தம் ஊராட்சியில் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிட மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டிச் சென்றவர்களுக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை : கீரணத்தம் ஊராட்சியில் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிட மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டிச் சென்றவர்களுக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் நகர் மற்றும் குறிஞ்சி நகர் அருகில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சாயத்திற்கு சொந்தமான பொது இடம் உள்ளது. இங்கு மருத்துவக் கழிவு, மாமிசக் கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகளை சமூகவிரோதிகள் சிலர் தொடர்ந்து கொட்டி வந்தனர். 

இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ஊராட்சி அதிகரிகளுக்கு தகவல் அளித்த குடியிருப்புவாசிகள், லாரிகளில் வந்து கழிவுகளை கொட்டிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.

இதனையடுத்து, கழிவுகள் கொட்டப்படும் பொது இடத்தை ஊராட்சி அலுவலர்கள் கண்காணிக்கத் தொடங்கினர். 

இந்த நிலையில், இன்று காலை கோழிக்கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்ட வந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர். பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக கீரணத்தம் ஊராட்சியின் தனி அலுவலர் பி.சுந்தரியின் உத்தரவின் பேரில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். முத்துராஜூ மற்றும் ஊராட்சி செயலாளர் பாலசுந்திரம் ஆகியோர் லாரி உரிமையாளருக்கு ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.



மேலும், அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த 10 டன்னிற்கும் அதிகமான குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...