கோவை : நான் அடித்து விடுவேன் என்ற பயத்தில் முதலமைச்சர் இருப்பதாகக் கூறிய எம்.எல்.ஏ., கருணாஸ், முடிந்தால் என்னை அடித்துப் பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ.,கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
கோவை : நான் அடித்து விடுவேன் என்ற பயத்தில் முதலமைச்சர் இருப்பதாகக் கூறிய எம்.எல்.ஏ., கருணாஸ், முடிந்தால் என்னை அடித்துப் பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ.,கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
கோ- ஆப்டெக்ஸ் மருதம் விழா கால சிறப்பு விற்பனை மற்றும் விரிவாக்கப்பட்ட நிலையத்தை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி., அருண்குமார், சூலுர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் அடித்து விடுவேன் என முதலமைச்சரே பயப்படுகிறார் என்ற சர்ச்சையாக பேசியது கண்டனத்திற்கு உரியது. கருணாஸ் சின்ன பையன் அடக்கி வாசிக்க வேண்டும். இது போன்று பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மாதிரியான அவரது பேச்சு ஈனத்தனமான பேச்சாகும். இவ்வாறு பேசி சாதி பிரச்சினையை தூண்டி விடுகின்றார் கருணாஸ்.
இவ்விவகாரத்தில் கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும். இல்லாவிடில் ஆயிரம் கருணாஸ் உருவாகி விடுவார்கள். மேலும், கண்டிப்பாக கருணாஸை கைது செய்ய வேண்டும். அடித்தால் முதலமைச்சர் வாங்கிக்கொள்வார். ஏனெனில், அவர் இயேசு நாதரை போன்றவர். தைரியமிருந்தால் என்னை அடித்து பார்க்கட்டும், இவ்வாறு அவர் கூறினார்.