கோவை: கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சை தான் கேட்கவே இல்லை என்று கோவையில் கமலாஹாசன் கூறியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது, முதலமைச்சர் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சாதி கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அரவது பேச்சு இருந்தது.
தற்போது கருணாஸ் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கருணாஸ் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு, "கருணாஸ் பேச்சை நான் இன்னும் கேட்கவில்லை. இருப்பினும் யாரும் யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை." என்று கூறிச்சென்றார்.