கோவை: சாடிவயல் யானைகள் முகாமில் உள்ள சேரன் என்ற 32 வயது கும்கி யானைக்கு கண் மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த யானையும், ஜான் (27) என்ற யானையும் முதுமலை யானைகள் காப்பகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் அழைத்து வரப்பட்டன. அப்போதே சேரனுக்கு கண் பார்வை குறைபாடு இருந்தது. இருந்த போதிலும் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு யானைகளுக்கு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எட்டு பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழு தற்போது வலது கண்ணில் புரை ஏற்பட்டுள்ள சேரனுக்கு நேற்று முதல் சிகிச்சை அளித்து வருகின்றன.
சிகிச்சை அளிப்பதை முதன்மை வன பாதுகாவலர் ராஜீவ்.கே.ஸ்ரீவத்சவா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.