கோவை: தடாகம் அருகே பண்ணைக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த வீட்டை சேதப்படுத்தி சென்ற சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.

தடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். விவசாயியான இவரது நிலத்தில் இன்று காட்டு யானைகள் புகுந்தன. மேலும், அந்த இடத்தில் இருந்த வீட்டை நோக்கி நகர்ந்த யானைகள், வீட்டினுள் இருந்த தானியங்களையும் காய்கறிகளையும் உண்ண முயற்சித்தன.

இது குறித்து குமார் கூறுகையில், "வீட்டை சேதப்படுத்தி உள்ளே புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்து தக்காளி மற்றும் தானிய வகைகளை உண்டன. இதனால் ஜன்னல்கள் மற்றும் போர்டிகோ சேதமடைந்துவிட்டது. உடனடியாக வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும்."என்றார்.