கோவை: கடந்த 2013-ம் ஆண்டு கோவையில் கயிற்றால் இறுக்கி வாலிபரை கொலை செய்த வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சிலாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கமணி (37) மற்றும் ராமச்சந்திரன் (22). இவர்கள் இருவரும் கோவையில் தங்கி பாலக்காடு பகுதியில் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதே ஊரை சேர்ந்தவர் வன்னிராஜ் (34). இவர் தங்கமணியின் வீட்டின் அருகில் குடியிருந்தார்.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் இவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. இந்த நிலையில், தங்கமணியின் மனைவி சமுத்திரக்கனியுடன் வன்னிராஜ்-க்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த தங்கமணி மற்றும் ராமச்சந்திரன் வன்னியராஜை கண்டித்தனர்.
அப்போது இரு தரப்பினரிடையே மோதல் முற்றியது. தொடர்ந்து, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து, வன்னியராஜ் கழுத்தை கயிற்றால் இறுக்கி படுகொலை செய்தனர். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சகோதரர்கள் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், இது தொடர்பான வழக்கு கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், சகோதரர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.