கோவை: சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை பற்றி என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்வது முரணாக உள்ளது என்று விசாரணைக்குள்ளான அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அன்வர் உசைன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தாமதப்படுத்தியதால், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து, அபுதாகீர், சதாம் உசேன், முபாரக், சுபேர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டனர். இதில் அபுதாகீர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.

தற்போது, இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளிலும், விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் மாவட்ட தலைவர் அன்வர் உசேனை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ அலுவலகம் நேற்று சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, கோவை பந்தய சாலையிலுள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் அன்வர் உசேன் இன்று ஆஜரானார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக இன்று என்னை ஆஜராக சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இன்று ஆஜரானேன். ஆனால், சம்மனில் குறிப்பிட்ட வழக்கு குறித்து விசாரணை செய்யாமல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பினர்.
இதில் அமைப்பின் நிர்வாகிகள் குறித்தும் விசாரணை செய்தனர். சசிகுமார் கொலை வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் விசாரணை செய்ததில், அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு வீட்டை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சியை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது வேதனையளிக்கிறது." என்றார்.