கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி. சாலையை மாதிரி சாலையாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் முக்கிய சாலைகளை 'மாதிரி சாலை'களாக உருவாக்க கோவை மாநகராட்சி முடிவு செய்து, திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
மோட்டார் அல்லாத வாகனங்களுக்கான பிரத்யேக தளம், நடைபயிற்சி செய்பவர்களுக்கான பாதை, சூரிய மின் விளக்குகள், இருக்கை வசதிகள், நவீன கழிப்பறைகள், தொலைத்தொடர்பு கம்பிகளை நிலத்திற்கு அடியில் நவீன தொழில்நுட்ப இணைப்புகளின் மூலம் கட்டமைத்தல் போன்ற அம்சங்கள் மாதிரி சாலை திட்டத்தில் வடிவமைக்கப்பட்டன.

முதற்கட்டமாக, ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலையில் 1.80 கி.மீ நீளத்திற்கு மாதிரி சாலை உருவாக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
தற்போது, டி.பி.சாலையில் பத்து இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சாலையின் அமைப்பு, மண் பரிசோதனை, பாதாள சாக்கடை குழாய்கள், நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளின் கட்டமைப்பு ஆகியவற்றை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுகள் முடிந்தபின்னர் மாதிரி சாலைக்கான கட்டமைப்பு பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "நகரின் முதல் மாதிரி சாலை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உருவாக்கப்படவுள்ளது. பல்வேறு நவீன வசதிகளும், கட்டுமானங்களும் இங்கு அமைக்கப்படவுள்ளன. நிதி மதிப்பீட்டை கருத்தில் கொண்டு வரைபடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த வாரம் முதல் மண் பரிசோதனைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன," என்றார்.
டி.பி.சாலையை அடுத்து திருவேங்கடம் சாலையில் 1.20 கி.மீ நீளத்திற்கும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 3 கி.மீ நீளத்திற்கும் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, நிதி ஒப்புதலுக்காக நகராட்சி நிர்வாகத்துறை மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. வரைவு திட்டத்தின் நிதி மதிப்பீடு அதிகமாக இருப்பதால், நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் திட்ட வரைபடத்தில் திருத்தங்கள் செய்யுமாறு அரசு வலியுறுத்தியது.
இதனையடுத்து, திருவேங்கடம் சாலையில் மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமையவிருக்கும் மாதிரி சாலைக்கான திருத்திய வரைபடங்களை தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.