உதவித் தொகைக்காக உயிரை பணையம் வைத்து நடை பயணம் : கோவையில் சிரமப்படும் முதியவர்கள்

கோவை: போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் இன்னும் நாட்டின் சில கிராமப்புற பகுதிகளை அடையாமல் இருக்கும் சூழலில், கோவையில் உதவித் தொகை வேண்டி வரும் முதியவர்களை காட்டுப் பாதையில் நடக்க வைத்து சிரமப்படுத்துகிறது சமூக நலத்துறை.


கோவை: போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் இன்னும் நாட்டின் சில கிராமப்புற பகுதிகளை அடையாமல் இருக்கும் சூழலில், கோவையில் உதவித் தொகை வேண்டி வரும் முதியவர்களை காட்டுப் பாதையில் நடக்க வைத்து சிரமப்படுத்துகிறது சமூக நலத்துறை.



90 வயதுக்குட்பட்ட அந்த முதியவர்கள் தங்களது கிராமங்களில் இருந்து விலங்குகள் நடமாடும் காட்டுப்பகுதி வழியாக பல கிலோ மீட்டர்கள் தொலைவை நடந்து கடந்து உதவித் தொகையை வாங்க வேண்டிய அவல நிலை கோவையில் அரங்கேறி வருகிறது.

கோவையில் மட்டும் 74,000 முதியவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையாக பெறுகின்றனர் என்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அந்த பணம் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படும். முன்னதாக அவர்கள் கைரேகை வைக்க வேண்டும். கைரேகையை உறுதி செய்த பின்னர் அந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கோவையில் 65 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 2025 முதியவர்கள் இந்த உதவித்தொகையை பெறுவதற்காக இழுத்தடிக்கப்படுகின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்த முதியவர்கள் இந்த பணத்தை காட்டுப்பாதை வழியாக சுமார் ஐந்து கிலோமீட்டர் நடந்தே செல்கின்றனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், "முத்துவயல், கல்கொத்திபதி, முள்ளன்காடு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் நாங்கள். மாதந்தோறும் சாடிவயலில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாதந்தோறும் வந்து உதவித் தொகைக்கு கைரேகை வைக்கக் கூறுகின்றனர் அதிகாரிகள்." என்றனர். 

இது குறித்து கந்தசாமி என்ற பயனாளி கூறுகையில், "எங்கள் பகுதியில் இருந்து பேருந்தின் மூலமாகச் சென்று மீண்டும் கிராமங்களுக்குள் நுழைவதற்குள் ரூ.100 செலவாகிவிடுகிறது. இதனால் உதவித் தொகையை பெற நடந்தே செல்ல வேண்டிய சூழல் உள்ளது." 

90 வயது மூதாட்டி ஒருவரும் இந்த உதவித் தொகையை பெற தனது நடை பயணத்தை தொடர்கிறார். பெரும்பாலானோர் இதனை நடக்க வேண்டும் என்பதற்காகவே உதவித் தொகையை வாங்குவதில்லை என்கிறார் அவர். 

எங்கள் பகுதிகளிலேயே இதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் பயனில்லை என்று குமுறுகின்றனர் முதியவர்கள்.

இது குறித்து பேரூர் தாலுக்கா தாசில்தார் கூறுகையில், :மக்களின் இந்த பிரச்சனைக்கு வங்கிகளிடம் பேசி நல்ல தேர்வு எட்டப்படும். அந்தந்த வங்கி ஊழியர்கள் பயனாளிகள் வாழும் கிராமங்களுக்கு சென்று உதவித் தொகையை வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.

பெரும்பாலான பணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் உதவித் தொகை தரும் நாளில் வரமுடியாத முதியவர்களுக்கு, மற்றொரு நாளில் வந்து பணத்தை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...