140-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தி இந்து நாளிதழ்'

அன்றாட நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு செல்லும் நாளிதழ்களில் மிகவும் பழமை வாய்ந்த பிரபல 'தி இந்து' நாளிதழ் 140-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளத

அன்றாட நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு செல்லும் நாளிதழ்களில் மிகவும் பழமை வாய்ந்த பிரபல 'தி இந்து' நாளிதழ் 140-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளத 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் பிரசுரிக்கப்படும் இந்த செய்தித் தாள் 1878-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவை ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், இந்தியர்களின் கருத்துக்களை வெளியிடுவதற்காகவும் திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்த பத்திரிக்கையை தொடங்கினர். 

ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தி இந்து பத்திரிக்கை, முதலில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வார இதழாகவே வெளிவந்தது. பின்னர், 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது. செய்தித்தாள் நாள்தோறும் சுமார் 14.5 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. 

1887-ல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898-ல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 

1900-களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்றார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகின்றனர். 

தி இந்து 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910-களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து பத்திரிக்கை ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி.எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோர் சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து பத்திரிக்கை அதை கடுமையாக எதிர்த்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 

1948-ல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987-ல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 2006-ம் ஆண்டு இ-பேப்பரும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-ம் ஆண்டு அரசியல் மையம் மற்றும் பொதுக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டன. 

2016-ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட thehindu.com இணையதளம் தெற்கு ஆசிய அளவில் சிறந்த செய்தி இணையதளத்திற்கான பரிசை வென்றது. 2017-ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாட்களும் என விரிவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் புதிய வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து- 2018-ம் ஆண்டில் மொபைல் செயலியிலும் இந்து நாளிதழ் வெளியிடப்பட்டது. 

1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 - 2001 வரை என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.

இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008-ன் படி, இந்து பத்திரிக்கை நாள்தோறும் 14.5 லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது. படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. 

இந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா, மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...