மாநகராட்சி ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சரின் சகோதரர் உத்தரவுப்படி தான் வழங்கப்படுகிறது : தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றச்சாட்டு

கோவை : கோவை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்கப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெறவில்லை என்றும், அமைச்சரின் சகோதரர் உத்தரவுப்படி தான் வழங்கப்படுகிறது என்று தி.மு.க. எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை : கோவை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்கப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெறவில்லை என்றும், அமைச்சரின் சகோதரர் உத்தரவுப்படி தான் வழங்கப்படுகிறது என்று தி.மு.க. எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.,வின் மாவட்ட கழக பொறுப்பாளருமான நா.கார்த்திக், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையாளரை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தார்.



அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- மாநகரில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ள போதும், பெரும்பாலான பகுதிகளுக்கு 20 அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. காந்திபுரத்தில் தி.மு.க., சார்பில் நிறுவப்பட்ட அண்ணா சிலையை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள தரைமட்ட சுற்றுச்சுவர் இடிந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. அதனை உடனடியாக பராமரித்து சீரமைக்க வேண்டும். பராமரிப்பில்லாமல் பழுதாகியுள்ள சோலார் தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளுக்காக தோண்டியதால் பழுதடைந்துள்ள சாலைகளில், பேட்ச் வொர்க் செய்து சீரமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்கி நிற்கும் பழுதடைந்த மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்து, புதிய வடிகால் அமைக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, மாநகராட்சி ஒப்பந்தங்கள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து தி.மு.க., சார்பில் தொடர்ந்து புகாரளித்து வருகிறோம். கோவை மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத வகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டு வருகிறார். 



பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் ஒப்பந்தங்கள் ஆன்லைன் முறைப்படி வெளிப்படையாக நடைபெறுவதில்லை. ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சரின் சகோதரர் உத்தரவுப்படி குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில், உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தவுள்ளோம். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்கப்படுவதில்லை, இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...