நீலகிரி : நக்சல்கள் ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நக்ஸல் தேடுதல் படையினருக்கு யானைகளை விரட்டும் புதிய வெடி சப்தம் இடும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி : நக்சல்கள் ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நக்ஸல் தேடுதல் படையினருக்கு யானைகளை விரட்டும் புதிய வெடி சப்தம் இடும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் இரண்டாம் சீசன் நடைபெறவுள்ளது. இதில், கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனை சாதகமாகப் பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகள், நீரோட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பாறை குகைகள் உள்ளிட்ட பகுதிகளிலும், முள்ளி, பரளி, செங்கல்புதூர், செங்கல்கொம்பை உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களிலும் மாவோயிஸ்ட்கள் தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில், நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவின் உத்தரவின் பேரில், என்.எஸ்.டி., துணை ஆய்வாளர் பழனிசாமி, சிறப்பு துணை ஆய்வாளர் சகாதேவன் தலைமையில் நியமிக்கப்பட்ட நக்ஸல் தேடுதல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எட்டு பேர் கொண்ட இந்த குழுவிற்கு தற்போது யானைகளை விரட்டும் புதிய வெடிசப்தம் இடும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் இருந்து நீலகிரி ஆதிவாசி கிராமங்களுக்குள் எளிதாக மாவோயிஸ்ட்கள் வரக்கூடும் பகுதிகளில் நக்சல் தேடுதல் படையினர், சுமார் 22 கிலோ மீட்டர் வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.