தென்திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவ தேர்திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து தினசரி வெங்கடேஸ்வர பெருமாள் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். மேலும், ஸ்நபன திருமஞ்சனம், முத்துப்பந்தல், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம் போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. 

இந்த நிலையில், பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியிடன் வலம் வரும் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பின்னர், வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க திருத்தேரினை கோவிந்தா...கோவிந்தா... என கோசங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர் கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...