கோவையில் கண்கவர் கைவினைப் பொருட்களின் 3 நாள் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை : கைவினை கலைஞர்களின் மேம்பாட்டிற்காக கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் 3 நாள் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : கைவினை கலைஞர்களின் மேம்பாட்டிற்காக கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் 3 நாள் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது. 



கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு என்ற தொண்டு நிறுவனம், கடந்த 31 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வருகிறது. இந்தத் தொண்டு நிறுவனம் கிராப்ட் கவுன்சில் ஆப் இந்தியா சென்னை மற்றும் கிராப்ட் கவுன்சில் ஆப் வோல்ட்டின் அங்கீகாரம் பெற்றது. இந்தத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கமே கோவில்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆபரணங்களையும், மாலைகளையும் ஆவணப்படுத்துவதுதான். இதைத் தவிர, கற்கள், பனை இலைகள், உலோகத் தகடுகள் ஆகியவற்றை கொண்டு கைவினை பொருள்களை உருவாக்குவோருக்கு ஊக்கம் அளித்து வருகிறது. 



இந்தத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'சிருஷ்ட்டி' என்ற பிரத்யேகக் கண்காட்சி கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்காட்சியில் மகேஸ்வரிஸ், சண்டீஸ், காஞ்சிவரம், சில்க் காட்டன்ஸ், கோடஸ், துஸார்ஸ், உபடாஸ், ஜோஜெட்டெட்ஸ், கிரெப்ஸ், பனாரஸ், சிக்ணிகாரி வேலை, பெங்கால் காட்டன்ஸ், காந்தா வேலை, பிளாக் பிரிண்ட்ஸ், கவுச் வொர்க், ஆந்திர சேலைகள் படோலா சேலைகள்.ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, ஷர்ட், ஆடவர் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், ஆபரணங்கள், கிப்ட் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் என அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இன்று முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிராப்ட் பஜார் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் முதல் கேரளம் வரையுள்ள கைவினைக் கலைஞர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கண்காட்சி மூலமாக பெறப்படும் நிதியானது கைவினை கலைஞர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடந்த ஆண்டு 118 மேற்பட்ட இடங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. 

இந்த கண்காட்சியை கிராப் கவுன்சில் ஆப் தமிழ்நாடு தலைவர் ஜெய்ஸ்ரீ ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் செயலாளர் சுஜினிபாலு, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி ராமச்சந்திரன், வெங்கடலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...