திருப்பூர் : திருப்பூர் மாநகரில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசிகளை வாங்கி கொண்டு விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் ரேஷன் அரிசிகளை சேகரித்த நபர் மூட்டைகளாக இரு சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்லும் போது, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இளைஞரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரனாகப் பதில் அளித்ததைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பதும், பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும், திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் வாங்கப்படும் ரேஷன்.அரிசிகளை, கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள வடமாநில இளைஞர்களுக்கு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், 200 கிலோ மதிப்பிலான நான்கு அரிசி மூட்டைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.