இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டால் கடன்களை மாற்றியமைக்க அனுமதி : பிரதமர் மோடிக்கு தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கத்தினர் நன்றி

இயற்கைப் பேரழிவால் பாதிப்பு ஏற்பட்டால் நாடு முழுவதும் சர்க்கரைத் தொழில்துறையின் கடன்களை மறுசீரமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இயற்கைப் பேரழிவால் பாதிப்பு ஏற்பட்டால் நாடு முழுவதும் சர்க்கரைத் தொழில்துறையின் கடன்களை மறுசீரமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கூறினர். மேலும், கடும் வறட்சியின் காரணமாக சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும், இதனால் ஆலைகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர். நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகளை மூடினால், தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவர் என்பதை எடுத்துரைத்தனர்.



தமிழக பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு கடந்த 17-ம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் எப்படிப்பட்ட இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும் நாடு முழுவதும் சர்க்கரைத் தொழில் துறையின் கடன்களை மறுசீரமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 10%-க்கும் மேலான பங்களிப்பை தமிழ் நாடு வழங்கும் நிலையில், 41 தமிழக சர்க்கரை ஆலைகளின் நிதி சார்ந்த சுமைகளை குறைக்கும் வகையில் பெரிய நிவாரணமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நன்மையைக் கருதி சர்க்கரைத் தொழில் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி துரிதமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது கரும்பு விவசாயிகளுக்கு தற்போது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு தமிழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கத்தினர் கூறியுள்ளனர். மேலும், இந்த முயற்சிகளுக்கு பெரும் துணை நின்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...