விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைந்து வழங்க நடவடிக்கை : மாவட்ட பாஸ்போர்ட் அலுவலர்

கோவை : பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேரம் விரயம் தவிர்த்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கோவை : பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேரம் விரயம் தவிர்த்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார். 

கோவையில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து பாஸ்போர்ட்டை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோவை பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டு 10-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 



அவர் கூறியதாவது :- முன்பு பாஸ்போர்ட் கோரி கவுண்டர்களில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய 45 நிமிடங்கள் ஆகி வந்தன. தற்போது, அது 14 நிமிடங்களாக நேரம் குறைக்கப்பட்டதுடன், அந்தப் பணிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, விண்ணப்பதாரர்களின் காவலர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நேரமும் தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம், 11,52,711 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 11,25,178 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...