கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளுக்குள் புலிகள் கணக்கெடுப்பு பணிகளுக்காக பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் புலிகளின் கணக்கெடுப்பு பணிக்காக வனத்துறையினரால் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை திருடிய ஆறு பேர் கொண்ட வேட்டை கும்பலை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
புலிகள் ஒரு காட்டில் இருப்பது உறுதியானால் அதுவே அப்பகுதி வனம் செழிப்பாக இருப்பதன் குறியீடாகும். மேலும், புலிகளின் நடமாட்டம் மற்றும் அதன் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பல்வேறு வன வளர்ச்சி திட்டங்கள், வன உயிரின பாதுகாப்பு திட்டங்கள் போன்றவை தேசிய புலிகள் காப்பக ஆணையத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. எனவே, புலிகளின் எண்ணிக்கையை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக கணக்கிட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டது.
அதன்படி, ஏற்கனவே புலிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அடர்ந்த காப்புக்காட்டு பகுதிகளுக்குள் புலிகளின் காலடித்தடம் மற்றும் அவற்றின் எச்சங்களின் அடிப்படையில் இவை புதர் மறைவுகள் மற்றும் மரங்களில் பொருத்தப்பட்டிருந்தன. இந்த நவீன கேமராக்களின் முன்புறமாக எந்த உயிரினம் கடந்து சென்றாலும் கேமரா தானாக இயங்க துவங்கி அவற்றை படம் பிடித்துக்கொள்ளும். இவை 24 மணிநேரமும் செயல்படும்.
இந்த நிலையில், மனிதர்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்ட இப்பகுதிகளில் வனக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இக்கேமராக்கள் பெரும் தடையாக இருந்து வந்தன. காடுகளுக்குள் மரங்களை வெட்டி கடத்துவோர், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடுவோர் போன்ற கும்பல்களின் நடமாட்டமும் இந்த கேமராக்களில் பதிவாகிவிடும் என்பதால் இவற்றை இக்கும்பல் திருடுவது அல்லது தங்களது உருவம் பதிவாகிவிட்ட கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி பவானியாற்றுக்குள் வீசுவது, வனத்திற்குள்ளேயே குழி தோண்டி புதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து ஏழு கேமராக்கள் களவாடப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் போயின. புலிகளின் கணக்கெடுப்பிற்கென நவீன முறையில் உருவாக்கப்பட்ட இக்கேமரா ஒவ்வொன்றின் விலையும் ரூ. 25,000 ஆகும். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து கேமரா திருடர்களை தேடி வந்த வனத்துறையினர், வேட்டை கும்பலை சேர்ந்த மகேந்திரன், மனோஜ், ரங்கநாதன், ராஜ்குமார், கருப்புசாமி, ராஜன் என ஆறு பேரை இன்று கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து இரண்டு கேமராக்கள் மற்றும் மான் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.