கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சொத்து வரி நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு, வரிவசூல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை என மாநகராட்சி சார்பில் பல்வேறு வரி இணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவற்றை செலுத்தத் தவறிய கடை மற்றும் குடியிருப்பு உரிமையாளர்களின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனால், மண்டல வரி வசூல் மையங்களில் வரித்தொகை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சொத்துவரி நிர்ணயம் செய்யும் பணிகளை வருவாய்த்துறை மற்றும் நகரமைப்பு அதிகாரிகள் துவங்கியதோடு, சொத்து வரி நோட்டீஸ் விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தவிர்த்து, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சொத்து வரி விதிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சொத்து வரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 சதவிகித வரித்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் ரூ. 3 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றனர்.