கோவை : அரசியலில் இருப்பவர்களால் அரசியலை தேற்றத்தான் முடியும் என்றும், அதனை மாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை : அரசியலில் இருப்பவர்களால் அரசியலை தேற்றத்தான் முடியும் என்றும், அதனை மாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது :- மாணவர்களுடன் நான் உரையாடுவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இதனை மரியாதையுடன் சொல்கிறேன். மேலும், இவர்கள் கட்டி வைத்த அரங்கில் நமக்கு பேச அனுமதி இல்லை எனில், நாம் பேச வெட்ட வெளி போதும். பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் என சொல்கிறார்கள். ஆனால், அரசியல் பாடப்பிரிவை எடுத்துக்கொண்டவர்கள் என்ன செய்வார்கள்.

நாளை உங்கள் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கக்கூடியது அரசியல்தான். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எது நல்ல அரசியல் என்று நீங்கள் பேச வேண்டும். உங்கள் ஓட்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால், களத்திற்கு வாருங்கள். உங்கள் வயதில் நான் அரசியலில் வந்திருக்க வேண்டும். வராமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதனால், தான் நீங்களாவது இந்த வயதிலேயே வந்துவிடுங்கள், என்றார்.

இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு கமலஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன்..? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு வேலைகள் குறைந்து கொண்டே வருகிறது. சிறு தொழில்கள் பெருக ஆரம்பித்து தொழிலாளிகளின் உலகம் முதலாளிகளின் உலகமாக மாறுகிறது, எனக் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் இளைஞர்களுக்காக என்ன ஆதரவு செய்ய போகிறது என்ற கேள்விக்க அவர் கூறியதாவது :- அரசியலில் இருப்பவர்கள் அரசியலை தேற்றத்தான் முடியும். இளைஞர்களால் தான் இந்த அரசியலை மாற்ற முடியும். எனக்கு பிடித்த அவதாரமும் அரசியல்வாதி தான். நான் நானாக உங்களுடன் கலந்திருக்க இந்த அவதாரம் தான் உதவுகிறது, என்றார்.

மேலும், மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த கமலஹாசன், இந்தியாவில் விவசாயமும், கல்வியும் முன்னேற வேண்டும். மேலே வயல் இருந்து, மண்ணுக்கு கீழே வைரமும், வைடூரியமும் இருந்தால் கூட கீழே இருப்பதை விட்டுவிடுங்கள். தேர்தலில் காசு தான் விளையாடி வருகிறது. குவாட்டரும், ஸ்கூட்டரும் கொடுத்து ஓட்டு வாங்கி வருகிறார்கள். அதை வாங்க மாட்டோம் என்ற ரவுத்திரம் பழக வேண்டும், என அவர் கூறினார்.
