நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி குறித்த கலந்தாய்வு கூட்டம்

கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்டி சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது


கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மரு.இரா. ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அப்போது, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், துவங்கப்படவிருக்கும் திட்டப்பணிகள் குறித்தும் மாநகராட்சி அலுவலர்களிடம், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- டி.பி., சாலை மற்றும் திருவேங்கடம் சாலையை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் ரூ. 577 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் அடுத்தமாதம் துவங்கப்படும். 

நஞ்சுண்டாபுரம் மற்றும் ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை போன்று மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது, என்றார்.

மேலும், சொத்துவரி உயர்வு குறித்து கேள்விகேட்டபோது, "சொத்துவரி உயர்வால் ஆண்டிற்கு ரூ. 850 கோடி வரை அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், மேலும் பல வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும், எனக் கூறினார். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...