நீலகிரி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி., வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் உதகையில் நடைபெற்ற பழைய கார் விற்பனையாளர் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்டது.

உதகையில் இன்று பழைய கார் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பழைய கார் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரியால் பல லட்சக்கணக்கான கார்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. மத்திய அரசு தலையிட்டு பெரிய வாகனங்களுக்கு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

பழைய கார் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜி.எஸ்.டி., அமைய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பழைய கார் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஏ.டி.சி., தனியார் திடல் வரை ஊர்வலமாக சென்றனர்.