திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஆறு முனைகளில் இருந்து பிரச்சார பேரியக்கம் துவங்கியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை தலைவர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பராயன் கூறுகையில், "பாசிச பா.ஜ.க., இந்தியாவில் பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களைப் புகுத்தி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
2017-18 அறிக்கையின் படி, ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முற்றிலும் நலிவடைந்துள்ளன. இந்த நிலை நீடித்தால் திருப்பூர் பனியன் தொழில் அழிவது நிச்சியம். பெட்ரோல் விலை 100 ரூபாய் என்ற நிலைக்கு பாஜக கொண்டு வரும் என்பதில் ஏந்த வித சந்தேகமும் இல்லை.
பா.ஜ.க.,வின் வேஷத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 17-ம் தேதி ஆறு முனைகளில் இருந்து பிரச்சார பேரியக்கம் தொடங்கியுள்ளது. வேலூர், சென்னை, வேதாரணியம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட ஆறு இடங்களில் தொடங்கிய இந்த பிரச்சார பேரியக்கம், வரும் 23-ம் தேதி திருப்பூர் ராயபுரம் ரவுண்டானாவில் நிறைவடைகிறது." என்று அவர் கூறினார்.