கோவை: கோவை ரோட்டரி சென்ட்ரல் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஸ்பிக்மேகே ஆகியோர் இணைந்து ஸ்வஸ்த் 2018 - என்கிற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை மற்றும் பண்பாட்டு பயிலரங்கத்தை கோவையில் கடந்த 17-ம் தேதி நடத்தினர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 17-19 வரை கௌமாரம் பிரஷாந்தி அகாடமியில் மூன்று நாள் இப்பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கின் நிறைவு விழாவில் ரோட்டரி கவர்னர் ஏவி பதி பேசியதாவது:-
மூன்று நாட்கள் நடைபெற்ற ஸ்வஸ்த் பயிலரங்கில் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள் பயிற்றுவிப்பாளராக கலந்து கொண்டனர்.
இப்பயிலரங்கில் சுவர் ஓவியங்கள், களிமண் படிமம் செய்தல், தோல்பாவைக் கூத்து ஆகிய மூன்று கலைகளும் பிரதானமாகக் கொண்டு, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் அழகியல் சார்ந்த பார்வையையும் திறமையையும் ஊக்குவிக்கும் வண்ணம் கற்றுத்தரப்பட்டது.

இப்பயிற்சி அவர்களை மகிழ்விப்பதுடன் உற்சாகத்துடனும் வைத்திருக்கும். அவர்களது நுண்ணுணர்வை வெளிக்கொணரும் வகையில் நடைபெறும் இப்பயிலரங்கில் அவர்கள் கூட்டு முயற்சியையும் கற்றுக் கொள்வார்கள். சுவரோவியத்தில் புகழ்பெற்ற பாபு, களிமண் படிமக் கலையில் புகழ்பெற்ற புதுக்கோட்டை மெய்யர், தோல்பாவை கூத்தில் பல்வேறு விருதுகள் பெற்று, இந்திய அளவில் புகழ்பெற்ற ராஜீவ் புலவர் ஆகிய மிகச்சிறந்த கலைஞர்களால் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
கௌமாரம் பிரஷாந்தி பள்ளியின் 60 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டார்கள். மூன்று நாட்கள் காலை, மதியம் என்கிற சுழற்சியில் ஒரு பிரிவுக்கு 15 முதல் 30 குழந்தைகள் வரை இப்பயிலரங்கில் கலந்து கொண்டார்கள். எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் இடுக்கியைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் இப்பயிலரங்கை நடத்துவதற்கு 5,300 உறுப்பினர்களைக் கொண்ட ரோட்டரி மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
கவனிக்கப்படாத மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் உள்ளிருக்கும் உணர்வெழுச்சிகளை வெளிக்கொணர்வதற்கான இம்முயற்சிகளின் மூலம் ஸ்பிக்மேகே போன்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் வாழ்வில் சூரிய ஒளியை ஏற்படுத்துவதற்காக இங்கு வந்து பங்களிப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.