நீலகிரி: கூடலூர் அருகே உள்ள ஓவேலி ஆத்தூர் பகுதியில் உள்ள சந்தனத்தேவன் என்பவரின் வீட்டை ஒற்றை யானை இடித்து தள்ளியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி ஆத்தூரை சுற்றி புலி, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை இப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை அங்குள்ள சந்தனத்தேவன் என்பவரது வீட்டை இடித்து அரிசி மற்றும் தண்ணீரை எடுக்க உள்ளே சென்றது.
அப்போது வீட்டில் இருந்த சந்தனத்தேவன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு .யானையை விரட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, தனது வீட்டை வனத்துறையினர் சீரமைத்து தர வேண்டும் என்று சந்தனத்தேவன் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.