கோவை: கோவை வந்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப அளித்தனர்.
கோவை: கோவை வந்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப அளித்தனர்.
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பயிற்சி பட்டறை கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கு நேற்றும், இன்றும் என இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. சின்னியம்பாளையம் அருகிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், மாநில குழு உறுப்பினர்களின், சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டாம் நாளாக இன்று நடைபெறும் பயிற்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பங்கேற்கிறார். இதற்காக கோவைக்கு விமானம் மூலம் வந்த அவருக்கு கட்சியினர் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பின் மதியம் இரண்டு மணிக்கு குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சி.ஐ.ஐ. சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை பொள்ளாச்சியில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாளை திருப்பூரில் மக்களுடனான பயணம் என்ற பெயரில் நடைபெறும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ளார்.