பல்லடம் அருகே 230 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

திருப்பூர்: பல்லடம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் 230 கிலோ கலப்பட டீ தூள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: பல்லடம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் 230 கிலோ கலப்பட டீ தூள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63.வேலம்பாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் அவரின் பெயர் சரவணன் என்பதும், டீ கடைகளுக்கு கலப்பட டீத்துள் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.



அவரிடமிருந்து 61 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் கேத்தனூர் பகுதியில் உள்ள பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ டீத்தூள் மற்றும் அருள்புரம் பகுதியில் ஆம்னி வேனில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 கிலோ சாயமேற்றப்பட்ட கலப்பட டீத்தூளையும், ஆம்னி வேனையும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூள் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.



நிறமேற்றப்பட்ட கலப்பட டீ தூள்களை கோவை மற்றும் பொள்ளாச்சியில் தயார் செய்து பல்வேறு நிறுவனங்களின் பெயரில் பேக் செய்து விற்கப்படுவதாகவும், கலப்பட டீத்தூள் விற்பனை செய்த சரவணன், மூக்கையன், முரளி கிருஷ்ணன் மூவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஒரே நாளில் 230 கிலோ நிறமேற்றப்பட்ட கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...