நீலகிரி : கூடலூரில் இருந்து மேல் கூடலூர் மற்றும் பாலவாடி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு ஸ்டேண்ட் ஒதுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர் பகுதியானது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக இருப்பதால், இந்த பகுதியில் ஆட்டோக்கள், ஜீப்கள் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் , ஆட்டோக்களுக்கு உரிய இடம் ஒதுக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோ ஸ்டாண்டுக்கு முன்பாக நிரந்தர பேரிகார்டு அமைத்துள்ளதால் ஆட்டோக்கள் வெகுதூரம் சுற்றிக் கொண்டு மீண்டும் ஸ்டேண்டுக்கு திரும்பும் சூழ்நிலையை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் சிரமம் தெரிவித்தனர்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.