கோவை : சிறுவாணி சாலையில் உள்ள காலாம்பாளையம் பகுதியில் தாறுமாறாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மாதம்பட்டியில் இருந்து பேரூர் நோக்கி 22 வயது மதிக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். காளம்பாளையம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது முதலில் மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபரின் முகம்,கால் மற்றும் உடலின் பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
பின்னர் அந்தப் பகுதியிலிருந்து பாய்ந்து சென்ற இருசக்கர வாகனம் சுமார் 20 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியின் மீதும் வேகமாக மோதியது. இதில், சிறுமி படுகாயம் ஏற்பட்டு மயக்கத்தில் ஆழ்ந்தார். மேலும், அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரும் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது, அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.
பின்னர், தகவலின் பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து சென்றனர். மதுபோதையில் இளைஞர் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது சிறுவாணி சாலையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.