கோவை : விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் நிறைவடைந்த நிலையில், கோவையில் உள்ள குளத்தின் தன்மை குறித்த முழு விவரங்களை அதிகாரிகள் அளிக்காத சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு இரசாயனங்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் தடை விதித்திருந்தது. இருப்பினும், தடையை மீறி தொண்டமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நச்சுத் தன்மை மிகுந்த பொருட்களால் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த நிலையில், நீர் மாசுபாடு குறித்து பரிசோதனை செய்ய கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்ட குளங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதாவது, விசர்ஜனத்திற்கு முன்பும், பின்பும் என இருமாதிரியான தண்ணீரும் ஆய்வகங்களில் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே முதலில் வரவேற்பைப் பெற்றாலும், பரிசோதனைகளுக்கு பிறகு சரியான விவரங்களை அளிக்காததால் அதிருப்தியடைந்துள்ளனர்.
சிம்ப்ளிசிட்டியிடம் சமூக ஆர்வலர் கூறுகையில், "வழக்கமாக, ஒரு குறிப்பிட்ட குளங்களின் தண்ணீர் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் தரத்தினை கணிக்க முடியாது. பிற குளங்களின் தோற்றத்தையும் விநாயகர் விசர்ஜனம் செய்யப்பட்ட குளங்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், தண்ணீர் மாசடைந்துள்ளதா..? இல்லையா...? என தெரிந்து கொள்ள முடியும். அதேபோல, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது மட்டும் தண்ணீரின் தன்மையைப் பரிசோதிக்காமல், ஆண்டுதோறும் சுழற்சியின் அடிப்படையில் பரிசோதனை செய்தால், நீரின் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், கோவையில் உள்ள குளங்களை பாதுகாக்க அதிகாரிகள் தண்ணீரின் மாதிரி பரிசோதனை குறித்த விவரங்களை முழுவதும் தெரிவிக்க வேண்டும். குளத்தின் அடிப்பகுதிகளில் உள்ள மண்ணின் தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்," இவ்வாறு கூறினார்.
கோவையில் உள்ள குளங்களில் மொத்தம் 1,498 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அவற்றில் கோவை மாநகர் குளங்களில் 394 சிலைகளும், சிங்காநல்லூர், குறிச்சி, முத்தணன் மற்றும் சின்னாறு குளங்களில் எஞ்சிய சிலைகள் கரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.