திருப்பூர் : தாராபுரம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் பாதியில் கைவிட்டுச் சென்றனர்.

தாராபுரம் அடுத்த மாம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்பாதை அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் சென்றனர். விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணி செய்ய முற்பட்ட போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வாக்குவாதம் நீடித்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூலனூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

இருப்பினும், தொடர்ந்து விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அளவீடு பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.