சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. அதில், குன்னத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட நெட்டிச்சிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கோபியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30), குமார் (42), பாபு (42), நடராஜன் (47), சீனிவாசன் (21), ராஜேஷ்குமார் (30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 193 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 80,580-ம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...