திருப்பூர் : தாராபுரம் அருகே பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை 10 நாட்கள் காவலில் வைக்க தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் : தாராபுரம் அருகே பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை 10 நாட்கள் காவலில் வைக்க தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாராபுரத்தில் தீவுத்திடல் பூங்காவில் உள்ள ஆறரை அடி உயர பெரியார் வெண்கல சிலையை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். பெரியார் சிலையின் தலை பகுதியில் காலணிகளை வைத்து விட்டு சென்று விட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் அருகே உள்ள ரஞ்சிதாபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் நவீன் குமாரை (28) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சேம்பர் உரிமையாளரான நவீன் குமார் மட்டும் சிலையை அவமதித்தாரா..? அல்லது அவருக்கு துணையாக வேறு யாராவது சென்றார்களா..? என போலீசார் நவீன் குமாரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நவீன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நவீனை 10 நாட்கள் சிறையிலடைக்க தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சசிகுமார் உத்தரவிட்டார்.