கோவை : திண்டுக்கல்லில் ரவுடி பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞர்கள் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பொன்னுமாந்துறைப் புதுப்பட்டியைச் சேர்ந்த ரஃபேல் என்பவரது மகன் பாஸ்கரன் (32). இவர் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ராம்கி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதோடு, பாஸ்கரன் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், திண்டுக்கல்லை அடுத்த தோமையார்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஸ்கரனை, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகிலிருந்த வீட்டுக்குள் அவர் புகுந்துள்ளார். எனினும், விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் பாஸ்கரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் சண்முகவேல் (29), திண்டுக்கல் கொள்ளுப்பட்டறையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சரவணகுமார் (26), டி.புதுப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் ஸ்ரீரங்கன் (21) ஆகிய மூவரும் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.8) இன்று சரண் அடைந்தனர். இதையடுத்து, மூன்று பேரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.