மதுரை: வனத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வனத்துறையில் இருக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற உயர்மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆஜரானார்.
அப்போது, வனத்தை பாதுகாப்பதில் வேட்டைத் தடுப்பு காவலர்களின் பணி முக்கியமானது. கேரளாவில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோல் இங்கு வழங்கினால் என்ன..? அவர்களது பணியினை நிரந்தரம் செய்யாதது ஏன்..? வனத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு உயர்ரக, நவீன ஆயுதங்கள் வழங்காதது ஏன்..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் பதிலளித்தாவது :- வனத்துறையில் 6.000 பணியிடங்களில் 2.800 காலி பணியிடங்கள் உள்ளன. இதில், 1,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., அனுமதித்துள்ளது. விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதைத் தொடர்ந்து, நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய மரங்களை அகற்றுவது குறித்து மத்திய, தமிழக அரசு வழக்கறிஞர்களின் வாதம் நடைபெற்றது.
"யூகலிப்டஸ், சீகை மரங்களை பல கட்டங்களாக அகற்ற அனுமதி கோரி மத்திய அரசின் தேசிய வன உயிரின வாரிய நிலைக்குழுவின் அனுமதிக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பல கட்டங்களாக அகற்றப்படும்," என தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார். இதற்கு, அது பற்றி விபரங்கள் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை, என மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
மேலும், மின் கம்பங்களை உயரமாக மாற்றி அமைப்பது குறித்த நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தாவது :- மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் பலியாவதைத் தடுக்க, வனப்பகுதிகளில் தாழ்வான மின் கம்பிகளை மாற்றி உயரமாக அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அக்டோபர் 11-ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.