நீலகிரி: இறந்து கிடந்த எருமையின் உடலின் மீது விஷம் வைத்து பெண்புலியை கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சீகூர் வனச்சரகம் தெங்குமரஹாடாவில் கடந்த 2014-ம் ஆண்டு ஜீன் 20-ம் தேதி இறந்து கிடந்த எருமையின் உடலின் மீது விஷம் வைத்து பெண் புலியைக் கொன்ற வழக்கில் திம்மைய்யன் (60) என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், திம்மையனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகையை செலுத்தாதபட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.