விதிகளை மீறி கட்டப்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தை இடிக்க கோவை மாநகராட்சி உத்தரவு

கோவை: சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக இடிக்குமாறு கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கோவை : சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக இடிக்குமாறு கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'ஸ்ருதி என்கிளேவ்' குடியிருப்பு வளாகத்தில் 137 குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சென்ற வருடம் கோவை மாநகராட்சியில் முறையிட்டனர்.



இதையேற்று குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்த நகரமைப்பு பிரிவினர், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையாளர் சார்பில் 'ஸ்ருதி என்கிளேவ்'-விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்டும் மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்காததால், நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் கட்டிடத்தின் திட்ட அனுமதியை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திருத்திய வரைபடம் மற்றும் உரிய ஆவணங்களுடன், உள்ளூர் திட்டக்குழுமத்திடம் விண்ணப்பிக்க தவறியதால், விதிகளை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை உடனடியாக இடிக்குமாறு கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சார்பில் கட்டிட உரிமையாளர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...