நீலகிரி: அ.தி.மு.க அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகையில் தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி: அ.தி.மு.க அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகையில் தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் சூழலில், உதகையில் இன்று தி.மு.க.,வினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, முன்னாள் அரசு கொறடாவும், தி.மு.க மாவட்ட செயலாளருமான பா.முபாரக் பேசுகையில், "மனித உரிமைகளை தமிழக அரசு மீறி வருகிறது. தமிழக மக்கள் பார்க்காத ஊழல்களை அ.தி.மு.க., அரசு செய்து வருகிறது.
மக்கள் மீது அரசு நேரடி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. மேலும், ஊழல் செய்யாத அமைச்சர்களை அ.தி.மு.க.,வில் பார்க்க முடியவில்லை. தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கட்சித் தலைமை கூறியுள்ளது." என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் பலர் கலந்து கொண்டனர்.