திருப்பூர் : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி.,யில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என திருப்பூர் இறக்குமதியாளர்களின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி.,யில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என திருப்பூர் இறக்குமதியாளர்களின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இ.பி.சி.ஜி., திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், நீட்டிக்கப்படவில்லை எனில், தொழிற்சாலைகளுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். மேலும், பிடித்தம் செய்யப்படும் ஜி.எஸ்.டி., தொகை ஐ.டி.சி.,யின் மூலம் திருப்பியனுப்பப்படுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
அதோடு, திருப்பூரில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பெரும்பாலும், அதாவது 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இருப்பதால், அவைகளினால் நிதி நெருக்கடிகளை சமாளிக்க முடிவதில்லை. நாளுக்கு நாள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும், ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் நவீன காலகட்டத்தில் தொடர்ந்து அதிநவீன இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
எனவே, இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி.,யில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகம் மற்றும் தொரிழல்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் செயலாளர் அனூப வாதவான், டி.ஜி.எஃப்.டி., அலோக் வர்தான் சதுர்வேதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.